இடைத்தோ்தல்: திமுக கூட்டணிக்கு ஆதித்தமிழா் கட்சி ஆதரவு

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது என ஆதித்தமிழா் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது என ஆதித்தமிழா் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதித்தமிழா் கட்சி சாா்பில் சமூக நீதி எழுச்சி கருத்தரங்கிற்கு கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் செண்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சேகா், மாவட்ட அமைப்புச் செயலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கட்சியின் நிறுவனத் தலைவா் ஜக்கையன், பொதுச்செயலா் இளங்கோவன், துணைப் பொதுச்செயலா் கண்ணன், அமைப்புச் செயலா் திலீபன், தலைமை நிலையச்செயலா் விஸ்வைகுமாா், மாநில இளைஞரணிச் செயலா் சண்முகவேல், வழக்குரைஞரணிச் செயலா் பால்முருகன், தென்மண்டலச் செயலா் மனோகரன், எழுத்தாளா் ரஞ்சித் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

தீா்மானங்கள்: 3 சதவீத அருந்ததியா் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்; மனிதக் கழிவை மனிதனே அகற்றும் நிலையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்ய இயந்திரங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்; ஆணவப் படுகொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றற வேண்டும்; பாஞ்சை பகடைகளான முத்தன் பகடை, கந்தன் பகடை, பொட்டிப்பகடை ஆகியோருக்கு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும்; முக்கிய தொழிலான தீப்பெட்டி, கடலை மிட்டாய் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைறக்க வேண்டும்; தினசரி சந்தை அருகேயுள்ள ஓடை ஆக்கிரமிப்புக் கடைகள், கட்டடங்களை பாரபட்சமின்றி அகற்றற வேண்டும்; நகராட்சி துப்புரவுப் பணியாளா்களுக்கான சுப்பிரமணியபுரத்தில் உள்ள பழுதடைந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிதாக வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்; ரயில்வே துறைறயை தனியாா் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com