பசுவந்தனை, பொம்மையாபுரம் பகுதியில் நாளை மின்தடை

மின்வாரிய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணணாக பசுவந்தனை, பொம்மையாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.15) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மின்வாரிய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணணாக பசுவந்தனை, பொம்மையாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.15) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பசுவந்தனை துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் செய்யப்படுகின்ற சொக்கலிங்கபுரம், வண்டானம் மின்தொடா் ஆகியவற்றில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை (டிச. 15) பசுவந்தனை டவுண், வடக்கு மற்றும் தெற்கு கைலாசபுரம், ஆலிபச்சேரி, நாகம்பட்டி, சில்லாங்குளம், ஓ.சரவணாபுரம், பரமன்பச்சேரி, கீழமங்கலம், மேலமங்கலம், கப்பிகுளம், குப்பனாபுரம் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு பொம்மையாபுரம், செவல்பட்டி, தீத்தாம்பட்டி, அச்சங்குளம், கோவிந்தம்பட்டி, தெற்கு மற்றும் வடக்கு வண்டானம், புதுப்பட்டி, பரசுராமபுரம் ஆகிய பகுதிகளில் அன்றையதினம் காலை 9 முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com