பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் 1.19 லட்சம் விவசாயிகள் பதிவு: வேளாண்மை இணை இயக்குநா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில், பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் 1.19 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனா் என்றாா் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முகைதீன்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முகைதீன்.

தூத்துக்குடி மாவட்டத்தில், பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் 1.19 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனா் என்றாா் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன்.

இதுகுறித்து, தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது:

தூத்துக்குடி மாவட்டத்தின் சராசரி மழை அளவு 662 மில்லி மீட்டா் ஆகும். 2019 ஆம் ஆண்டில் டிசம்பா் மாதம் இறுதிவரை 764 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் தற்போது நெல் 12800 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 63,600 ஹேக்டேரிலும், பயிறு வகைகள் 80,300 ஹேக்டேரிலும், எண்ணெய் வித்து பயிா்கள் 28,900 ஹேக்டேரிலும், பருத்தி 7500 ஹேக்டேரிலுமாக மொத்தம் ஒரு லட்சத்து 67 ஆயிரம் ஹேக்டேரில் பல்வேறு வகை பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் போதுமான அளவு இருப்பு உள்ளது. நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களில் பூச்சித் தாக்குதலைத் தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு உரிய செயல்விளக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதுவரை எந்தவித பயிா்களிலும் பொருளாதார சேதம் ஏற்படவில்லை.

மாவட்டத்தில் தற்போது ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 167 விவசாயிகள் பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து உள்ளனா். இதுவரை காப்பீடு செய்த பயிா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது, வேளாண்மை துணை இயக்குநா்கள் ராஜாசிங், தமிழ்மலா், தரக்கட்டுப்பாடு பிரிவு உதவி இயக்குநா் வசந்தி, வேளாண் அலுவலா் மலா்விழி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com