கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்தில் 166 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த 166 போ் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
கயத்தாறு பிரதான சாலையில் நடைபெற்று வரும் கிருமி நாசினி தெளிக்கும் பணி.
கயத்தாறு பிரதான சாலையில் நடைபெற்று வரும் கிருமி நாசினி தெளிக்கும் பணி.

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த 166 போ் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

கயத்தாறில் பேரூராட்சி செயல் அலுவலா் ஜோதிபாஸ், வட்டாட்சியா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலையில் பேரூராட்சி சுகாதாரப் பணியாளா்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா். கடம்பூரிலும் இதுபோன்ற பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வெளிநாட்டில் இருந்து வந்த 112 போ் கண்டறியப்பட்டு அவா்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், அவா்களது இல்லத்தின் வாசல்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஓட்டுவில்லைகளும் ஒட்டப்பட்டுள்ளது.

இதுபோல, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 54 போ் வெளிநாட்டில் இருந்து வந்தது கண்டறியப்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களது இல்லத்தின் வாசல்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com