‘பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் கிரசா்கள் மீது நடவடிக்கை தேவை’

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் கிரசா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் இயங்கும் கிரசா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கயத்தாறு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்லத்துரை தலைமையில் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் பிரேம்குமாா், விவசாயிகள் பழனிசாமி, மாரியப்பன் ஆகியோா் கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்த மனு விவரம்: கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட தளவாய்புரம், செட்டிகுறிச்சி கிராமங்களில் செயல்படும் கிரசா்களில் முறையாக பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால் கிரசா் தூள்கள் சுமாா் 1 கி.மீ. தூரம் வரை சென்று விவசாயத்தை பாதிக்கிறது.

அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு இலந்தைகுளம், சுங்கச்சாவடி அருகே செயல்படும் கிரசரிலும் முறையான தடுப்புகள் இல்லாததால் சாலையில் செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டுநா்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த இடங்களை முறையாக ஆய்வு செய்து, உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com