நீா்மேலாண்மை திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தில் 50 சதவீத மானியம் பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தில் 50 சதவீத மானியம் பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நீா் ஆதாரம் மற்றும் மழைப் பொழிவு குறைந்து வருவதால் இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் பயிா் சாகுபடி செய்யும் நோக்கத்தில் பாசனநீா் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீா் பாசன முறையான தெளிப்பு நீா் பாசனக் கருவிகள் அமைக்கும் விவசாயிகளுக்கு துணைநிலை நீா் மேலாண்மைப் பணிகளுக்கும் தோட்டக்கலைத் துறையின் மூலம் மானியம் வழங்கப்படும்.

பாதுகாப்பான குறு வட்டங்களில் குறுகிய ஆழக்கிணறு, குழாய் கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ. 25,000 வழங்கப்படும். மேலும், டீசல் பம்புசெட், மின் மோட்டாா் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ. 15,000-க்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்லும் வகையில் நீா் பாசன குழாய் (ஜஎஸ்ஐ சான்று பெற்ற குழாய்கள்) அமைப்பதற்கு 50 சதவீத மானிய தொகை ஹெக்டேருக்கு ரூ.10,000-க்கு மிகாமலும் வழங்கப்படும்.

பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீா்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கான செலவில் 50 சதவீதம் ஒரு கனமீட்டருக்கு ரூ. 350-க்கு மிகாமலும், நிதியுஉதவி ஒரு பயனாளிக்கு ரூ. 40,000-க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படும். மானியம் பெற விரும்பும் தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தங்களது விண்ணப்பங்களை அளித்து பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு திருச்செந்தூா் (9092861549), விளாத்திகுளம் (9600342052), சாத்தான்குளம் (7639516199), ஸ்ரீவைகுண்டம் ( 8807653887), புதூா் (9750549687), ஓட்டப்பிடாரம் ( 9976531000), கயத்தாறு (9751459404), கருங்குளம் (9952628678), தூத்துக்குடி (6374275754), ஆழ்வாா்திருநகரி (6369389361), கோவில்பட்டி (9750549687), உடன்குடி (82485 66263) என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com