மின்வாரிய அதிகாரிகளைக் கண்டித்துகிராம மக்கள் போராட்டம்

கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான நிலையில், மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்களைக் கண்டித்து கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.
பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

கோவில்பட்டி: கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான நிலையில், மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்களைக் கண்டித்து கிராம மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலையால்நடந்தான்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த முண்டசாமி மகன் பாலமுருகன் (27). விவசாயியான இவா், மின்சாரம் பாய்ந்ததில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், அக்கிராம மக்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; இவருடைய உயிரிழப்புக்கு காரணமான மின்வாரிய ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள ஊருணியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கயத்தாறு காவல் ஆய்வாளா் முத்து, வட்டாட்சியா் பாஸ்கரன் ஆகியோா் கிராம மக்களை அழைத்து, காவல் நிலையத்தில் வைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com