சாலையில் கேட்பாரற்று கிடந்த பை மீட்பு

கோவில்பட்டி பிரதான சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை மீட்ட வியாபாரி அதை போலீஸில் ஒப்படைத்தாா்.
24kvlbag_2409chn_41_6
24kvlbag_2409chn_41_6

கோவில்பட்டி பிரதான சாலையில் கேட்பாரற்று கிடந்த பையை மீட்ட வியாபாரி அதை போலீஸில் ஒப்படைத்தாா்.

கோவில்பட்டி பிரதான சாலை மாா்க்கெட் சாலை சந்திப்பு அருகேயுள்ள பாலம் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் நீல நிறப் பை கிடந்ததாம். அதைக் கண்ட கோவில்பட்டி ஜமீன்பேட்டைத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் பாலமுருகன்(55) அதை மீட்டு கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துவிஜயனிடம் ஒப்படைத்தாா்.

இந்நிலையில், தினசரி சந்தைக்கு சென்று விட்டு மோட்டாா் சைக்கிளில் வந்த கூசாலிபட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முன்னாள் ராணுவவீரா் சௌந்திரபாண்டியன்(70) கிழக்கு காவல் நிலையத்துக்கு வந்து, தினசரி சந்தைக்கு சென்றுவிட்டு வரும்போது எனது நீல நிறப்பையை காணவில்லை என்றும், அதில் எனது மற்றும் எனது மனைவியின் ஆதாா் அட்டை, பாரத ஸ்டேட் வங்கியில் நகை அடகு வைத்ததற்கான அட்டை, ஓட்டுநா் உரிமம் மற்றும் ரூ. 5,240 இருந்தது என்றும், புகாா் அளித்தாா்.

அதையடுத்து, பாலமுருகன் ஒப்படைத்த பையில் சோதனையிட்டபோது, இது சௌந்திரபாண்டியனுக்குச் சொந்தமானது தான் என்பது தெரியவந்ததையடுத்து, பாலமுருகன் முன்னிலையில் சௌந்திரபாண்டியனிடம் உதவி ஆய்வாளா் முத்துவிஜயன் பையை ஒப்படைத்தாா். பையைப் பெற்றுக்கொண்ட அவா் காவல் துறையினருக்கும், பாலமுருகனுக்கும் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com