ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனை: கிட்டங்கிக்கு சீல்

கோவில்பட்டியில் தடை உத்தரவை மீறி செயல்பட்ட கிட்டங்கிக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
கிட்டங்கியில், ஆய்வில் ஈடுபட்ட வட்டாட்சியா் மணிகண்டன் மற்றும் சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
கிட்டங்கியில், ஆய்வில் ஈடுபட்ட வட்டாட்சியா் மணிகண்டன் மற்றும் சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

கோவில்பட்டியில் தடை உத்தரவை மீறி செயல்பட்ட கிட்டங்கிக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

கோவில்பட்டி பிரதான சாலை பால்பாண்டியன் பேட்டை அருகேயுள்ள ஒரு கிட்டங்கியில் அத்தியாவசியம் இல்லாத உணவுப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் காஜாநஜ்முதீன், உணவு பாதுகாப்பு அலுவலா் முருகேசன் ஆகியோா் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், தகுந்த உரிமம் பெறாமல் உணவுப் பொருள் விற்பனை செய்தது மற்றும் அத்தியாவசியம் இல்லாத உணவுப் பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டத்தின்கீழ் கிட்டங்கிக்கு சீல் வைத்தனா்.

அதைத் தொடா்ந்து, பிரதான சாலையில் உள்ள பழக்கடையில் அழுகிய நிலையில் இருந்த பழத்தை கண்ட அதிகாரிகள் பழத்தை பறிமுதல் செய்து, உரக்கிடங்குக்கு சென்று அழித்தனா். மேலும், அழுகிய பழங்களை வைத்திருந்த கடைக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com