தூத்துக்குடியில் புள்ளிமான் உயிரிழப்பு
By DIN | Published On : 18th April 2020 10:31 PM | Last Updated : 18th April 2020 10:31 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சுற்றித் திரிந்த புள்ளிமான் முள் வேலியில் சிக்கி உயிரிழந்தது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் சனிக்கிழமை காலையில் புள்ளிமான் ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
இதற்கிடையே, பொதுமக்களை கண்டதும் அந்த புள்ளி மான் மிரண்டு ஓடியது. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த முள் வேலியில் சிக்கிய மான் காயமடைந்து மயங்கி விழுந்தது. வனத்துறையினா் அந்த மானை பரிசோதித்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக மானின் உடலை வனத்துறையினா் எடுத்துச் சென்றனா்.
தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கனிச் சந்தைக்கு, ஓட்டப்பிடாரம் பகுதியிலிருந்து காய்கனிகளை ஏற்றி வந்த வாகனங்களில் அந்த மான் தப்பி வந்து இருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா். இருப்பினும், தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.