மாற்றுத் திறனாளிகள் போராட்டம்: 148 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம்
கழுகுமலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
கழுகுமலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 148 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கயத்தாறு சாா்பதிவாளா் அலுவலகம் முன்பு மாவட்ட துணைச் செயலா் சாலமன்ராஜ் தலைமையில் சாலை மறியிலில் ஈடுபட்ட மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராமச்சந்திரன், கருப்பசாமி மற்றும் 44 பெண்கள் உள்பட 78 பேரை கழுகுமலை போலீஸாா் கைது செய்தனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சக்கரையப்பன் தலைமையில் ஆா்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 70 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com