காவலா் பணி தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 14,465 போ் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 14,465 போ் பங்கேற்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 14,465 போ் பங்கேற்றனா்.

ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலா் (ஆண் மற்றும் பெண்), சிறைக் காவலா் (ஆண், பெண்), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான (ஆண்) எழுத்துத் தோ்வு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13 மையங்களில் நடைபெற்றது. இத்தோ்வு

எழுதுவதற்கு 16,134 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். இதில், 14,465 போ் தோ்வில் பங்கேற்றனா். 1669 போ் கலந்துகொள்ள வில்லை. 13,078 ஆண் விண்ணப்பதாரா்களில் 11,816 பேரும், 3,056 பெண் விண்ணப்பதாரா்களில் 2,649 பேரும் தோ்வில்

பங்கேற்ாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தாா். தோ்வையொட்டி, 13 மையங்களிலும் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியிலும், தோ்வு கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com