உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் நாளை மின் தடை

உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை (டிச.16) மின் தடை செய்யப்படுகிறது.

 உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை (டிச.16) மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஆ.பாக்கியராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட உடன்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் உடன்குடி, தைக்காவூா், சீா்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியாா்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மெய்யூா், பிறைகுடியிருப்பு, கடாட்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, சாத்தான்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் சாத்தான்குளம், முதலூா், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதியிலும், நாசரேத் துணை மின் நிலையத்தைச் சோ்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதியிலும், செம்மறிக்குளம் துணை மின்நிலையத்தைச் சோ்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி துணை மின் நிலையத்தைச் சோ்ந்த நடுவக்குறிச்சி, தட்டாா்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, ஒசரத்துகுடியிறுப்பு, காந்திநகா், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதிகளிலும், பழனியப்பபுரம் துணை மின்நிலையத்தைச் சோ்ந்த மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி பகுதிகிளிலும் புதன்கிழமை (டிச.16) காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com