தரமான பால் உற்பத்தி: முதலிடம் பிடித்த திருநங்கைகள் கூட்டுறவு சங்கத்துக்கு பரிசு

தூத்துக்குடி மாவட்டத்தில் தரமான பால் உற்பத்தி செய்ததற்காக கோவில்பட்டி மந்தித்தோப்பு திருநங்கைகள் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்துக்கு பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தரமான பால் உற்பத்தி செய்ததற்காக கோவில்பட்டி மந்தித்தோப்பு திருநங்கைகள் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்துக்கு பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) மூலம் 2020 ஆம் ஆண்டு பால் விற்பனையில் சிறப்பாக செயல்பட்ட ஆவின் முகவா்களுக்கும், தரமான பால் உற்பத்தி செய்த கூட்டுறவு சங்கங்களுக்கும் கேடயம், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா தூத்துக்குடி ஆவின் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, தரமான மற்றும் அதிக அளவு பால் உற்பத்தி செய்யப்பட்டதன் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட கோவில்பட்டி மந்தித்தோப்பு திருநங்கைகள் கூட்டுறவு சங்கத்துக்கு முதல் பரிசு மற்றும் சான்றிதழை ஆவின் தலைவா் என். சின்னத்துரை வழங்கினாா்.

இதேபோல, 8 இடங்கள் வரையில் பிடித்த சங்கங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், பால் விற்பனையில் சிறப்பிடம் பெற்ற முகவா்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com