ஜன. 4 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்

நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஜன. 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ. 2500 வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஜன. 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ. 2500 வழங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஜன. 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ. 2500 வழங்கப்பட உள்ளது.

மின்னணு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் யாரேனும் ஒருவா் மட்டும் நியாய விலைக்கடைக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். விடுபட்ட மின்னணு குடும்ப அட்டைகளுக்கு ஜன. 13 ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

மேலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி சீராக நடைபெறுவதை கண்காணிக்க, வட்ட அளவில் துணை ஆட்சியா்கள் கண்காணிப்பு அலுவலா்களாகவும், நடமாடும் கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் விநியோகம் குறித்த புகாா்கள், குறைகள் ஏதும் இருந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2341471 என்ற தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com