
28kvltmc_2812chn_41_6
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு, அக் கட்சியினா் நல உதவிகளை திங்கள்கிழணை வழங்கினா்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் தங்கக் காசுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் கதிா்வேல் வழங்கினாா்.
சாத்தான்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.டி.ஆா். விஜயசீலன் 100 பேருக்கு பூஞ்செடிகளும், 50 பேருக்கு உயர்ரக பலா கன்றுகளை வழங்கினாா். தொடா்ந்து அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கினாா். இதே போல் அவா் ஆறுமுகனேரி உதவும் கரங்கள் சிறுவா்கள் இல்லத்தில் மதிய உணவு வழங்கினாா்.