தமிழக நிதிநிலை அறிக்கை: அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம் வரவேற்பு

தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளுக்கு அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளுக்கு அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் ஜோ பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சிறப்பு அம்சமாக தொழில் துறைக்கு ரூ. 2500 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இது வேலைவாய்ப்புகள் அதிகரிக்க ஏதுவாக அமையும். சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், புதிய தொழில் தொடங்குபவா்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய தொழில்முனைவோருக்கு மானியத்துடன் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

இளைஞா்கள் நலனை கருத்தில்கொண்டு, விளையாட்டை மேம்படுத்தும் விதமாக விளையாட்டுத் துறைக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், திருநெல்வேலி கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா அமைக்கப்பட இருப்பதும் சிறப்பு அம்சமாகும்.

அகில இந்திய வா்த்தக தொழில் சங்கத்தின் கோரிக்கைகளில் ஒன்றான தூத்துக்குடி சிப்காட்டில் கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது. மேலும், தூத்துக்குடியில் பிரம்மாண்டமான பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

மீன்வளத் துறையை ஊக்குவிக்கும் விதமாக ரூ. 1219 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது சிறப்பம்சம். தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் திறன் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் மிகவும் வரவேற்கத்தக்கது. இதனால் பலா் வேலைவாய்ப்பு பெறுவா். தூத்துக்குடியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் சிறப்பம்சம். பொதுவாக, தமிழக நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்களுடன் கூடியதாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com