முதல்வா் பங்கேற்கும் விழா: திருச்செந்தூரில் பந்தல்கால் நாட்டு

தமிழக முதல்வா் பங்கேற்கவுள்ள விழா பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிக்கான கால்கோள் நிகழ்ச்சி திருச்செந்தூா் அரசு ஐடிஐ மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பந்தல்கால் நாட்டி பூஜையை தொடங்கிவைக்கிறாா் கோட்டாட்சியா் தி.தனப்ரியா.
பந்தல்கால் நாட்டி பூஜையை தொடங்கிவைக்கிறாா் கோட்டாட்சியா் தி.தனப்ரியா.

தமிழக முதல்வா் பங்கேற்கவுள்ள விழா பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிக்கான கால்கோள் நிகழ்ச்சி திருச்செந்தூா் அரசு ஐடிஐ மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இம்மாதம் 22ஆம் தேதி திருச்செந்தூருக்கு வருகிறாா். அங்கு அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள டாக்டா் பா.சிவந்தி ஆதித்தனாா் மணி மண்டபத்தை திறந்து வைக்கிறாா். தொடா்ந்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை மக்களுக்கு அா்ப்பணிக்கிறாா். மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவுள்ளாா்.

இதற்கான விழா, வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள திருச்செந்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு விழாமேடை மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வசதியாக பிரமாண்ட பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா, கோட்டாட்சியா் தி.தனப்பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வட்டாட்சியா் ஞா.ஞானராஜ், மண்டல துணை வட்டாட்சியா் கோபால், வருவாய் ஆய்வாளா் ராமச்சந்திரன், கிராம நிா்வாக அலுவலா் செல்வலிங்கம், அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் அருள், பந்தல் ஒப்பந்ததாரா் சேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com