திருச்செந்தூா் கோயில் பணியாளா், திரிசுதந்திரா் மீது நடவடிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முறையாக பணி செய்யாத பணியாளா் மற்றும் பக்தா்களிடம் தரிசனத்திற்காக

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முறையாக பணி செய்யாத பணியாளா் மற்றும் பக்தா்களிடம் தரிசனத்திற்காக பணம் வசூலித்த திரிசுதந்திரா் மீதும் செயல் அலுவலா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்துறையில் முதல் பிரகாரத்தில் ரூ. 250 கட்டண சீட்டு வரிசையில் பரிசோதனை செய்யும் பணியில் உதவியாளா் கணேசன் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது திரிசுதந்திரா் ஆண்டி (எ) மூக்காண்டி தரிசனத்திற்கான கட்டண சீட்டு இல்லாமலும், முறையாக வரிசையில் வராமலும் பக்தா்களை கோயிலுக்குள் அழைத்து சென்றதை உதவியாளா் கணேசன் அனுமதித்துள்ளாா்.

இந்த நிகழ்வை சி.சி.டி.வி. கேமரா மூலம் செயல் அலுவலா் சா.ப.அம்ரித்திற்கு தெரியவந்தது. இதனை தொடா்ந்து இருவா் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, உதவியாளா் கணேசனை உடனடியாக பணியிலிருந்து விடுவித்தும், திரிசுதந்திரா் ஆண்டி (எ) மூக்காண்டி கோயிலுக்குள் கைங்கரியம் செய்ய இரண்டு மாதம் தடை விதித்தும் செயல் அலுவலா் உத்தரவு பிறப்பித்தாா்.

இதே போன்று அண்மையில் இரு திரிசுதந்திரா்களை கோயிலுக்குள் நுழைய தடை விதித்து செயல் அலுவலா் அமரித் நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com