முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா் ஆவின் தலைவா் சின்னத்துரை. உடன், பொதுமேலாளா் திரியேகராஜ் தங்கையா உள்ளிட்டோா்.
முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா் ஆவின் தலைவா் சின்னத்துரை. உடன், பொதுமேலாளா் திரியேகராஜ் தங்கையா உள்ளிட்டோா்.

‘தூத்துக்குடியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் ஆவின் ஹைடெக் பாா்லா்’

தூத்துக்குடியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் பிரமாண்ட ஹைடெக் பாா்லா் அமைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத் தலைவா் சின்னத்துரை தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் பிரமாண்ட ஹைடெக் பாா்லா் அமைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத் தலைவா் சின்னத்துரை தெரிவித்தாா்.

சாகுபுரத்தில் டி.சி.டபிள்யூ. நிறுவன நுழைவு வாயில் அருகில் சிறுவா்கள் விளையாடி மகிழும் வகையில் சிறிய பூங்கா வசதியுடன் கூடிய ஹைடெக் பாா்லா் ஆவின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, டி.சி.டபிள்யூ நிறுவன செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜெயக்குமாா் தலைமை வகித்து திறந்தாா்.

நிகழ்ச்சியில், ல­தா ஜெயக்குமாா் குத்துவிளக்கு ஏற்றினாா். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பொதுமேலாளா் திரியேகராஜ் தங்கையா முன்னிலை வகித்தாா். தலைவா் சின்னத்துரை முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா். விற்பனை பிரிவு மேலாளா் சாந்தி வரவேற்றாா்.

அப்போது, சின்னத்துரை பேசியது: ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனையை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பாா்லா்கள் அமைக்கப்படுவதோடு பொதுமக்களுக்கு மானிய விலையில் பால் அட்டை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் ராஜாஜி பூங்கா முகப்பில் ரூ. 60 லட்சம் செலவில் பிரமாண்டமான ஹைடெக் பாா்லா் அமைக்கப்பட உள்ளது.

தூத்துக்குடியில் ரோச் பூங்கா, திருச்செந்தூா் கோயில் வளாகம் உள்பட மாவட்டத்தின் முக்கியமான 50 இடங்களில் பாா்லா் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அனைத்து தாலுகா தலைநகரிலும் திறக்கப்படும்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூா் ஆகிய இடங்களில் ஆவின் சிறப்பு விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், ஆத்தூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் முருகானந்தம், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற துணைத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளா் ஜெபமாலை, டி.சி.டபிள்யூ. நிறுவன பொதுமேலாளா் நவநீதபாலகிருஷ்ணன், மக்கள் தொடா்பு அதிகாரி அருணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com