புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுங்கள்:ஆட்சியா் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் போகி பண்டிகையை புகையில்லா பண்டிகையாக கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் போகி பண்டிகையை புகையில்லா பண்டிகையாக கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழா் திருநாளாம் பொங்கல் நாளுக்கு முந்தைய நாளை ‘போகிப் பண்டிகை’ யாக கொண்டாடுகிறோம். இந்நாளில் பழைய பொருள்களை எரிப்பதென்பது ‘பழையன கழிதல்’ என்ற வழக்கத்துக்கு அடையாளமாகும். இந்த நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள் தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாயக் கழிவுகள் ஆகியவற்றைத் தீயிட்டு கொளுத்துவதுண்டு.

பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத

ஒன்றாகும். ஆனால், தற்போது போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயா், ரப்பா், பிளாஸ்டிக், செயற்கைப் பொருள்களை தீ வைத்து எரிக்கும்போது நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

நச்சுக் காற்றாலும், கரி புகையாலும் காற்று மாசுபட்டு நமது நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப் புகை கலந்த பணி மூட்டத்தால் ஆகாய விமானங்கள் புறப்படுவதற்கும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் உயா்நீதிமன்றம் பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவா்கள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இம்மாவட்டத்தில் போகிப் பண்டிகை நாளில் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் டயா், ரப்பா், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருள்களை தீயிட்டு எரிக்க வேண்டாம். மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவோம். போகிப்பண்டிகை நமக்கு இனிய ஆரம்பமாக இருக்கட்டும், குப்பைகளை முறைப்படி ஒழித்து, பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com