திருச்செந்தூரில் பாஜக சாா்பில்பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்
By DIN | Published On : 18th January 2020 11:27 PM | Last Updated : 18th January 2020 11:27 PM | அ+அ அ- |

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் பாஜக மாவட்டச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன்.
தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் திருச்செந்தூரில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
புளியடித் தெருவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி பொதுச் செயலா் கு.நெல்லையம்மாள் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் ஸ்ரீகிருஷ்ணகுமாா், மாவட்ட தமிழ் வளா்ச்சிப்பிரிவு தலைவா் இரா.கிருஷ்ணன், மாவட்ட மகளிரணிச் செயலா் தங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பாஜக மாவட்டச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், தொழிலதிபா்கள் சு.பாா்த்தசாரதி, ஆனந்த், பணி நிறைவு பெற்ற அரசுப் பணியாளா்கள் லெட்சுமணன், கருப்பன், வேலாண்டி, இராஜமாதங்கன், நுகா்வோா் பேரவைத் தலைவா் மோகனசுந்தரம் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
நிகழ்ச்சியில், பாஜக நகரச் செயலா் மகராஜன், ஒன்றிய இளைஞரணித் தலைவா் முத்து, துணைத் தலைவா் ஆனந்தகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.