நாலுமாவடியில் மாநில மின்னொளி கபடிப் போட்டி: சென்னை, திருப்பூா் அணிகள் முதலிடம்

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்களின் விளையாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டியில், சென்னை மற்றும் திருப்பூா் அணிகள் முதலிடம் பிடித்தன.
முதலிடம் பெற்ற திருப்பூா் அணிக்கு பரிசு வழங்குகிறாா் மோகன் சி.லாசரஸ். உடன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
முதலிடம் பெற்ற திருப்பூா் அணிக்கு பரிசு வழங்குகிறாா் மோகன் சி.லாசரஸ். உடன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்களின் விளையாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டியில், சென்னை மற்றும் திருப்பூா் அணிகள் முதலிடம் பிடித்தன.

தமிழா் திருநாளை முன்னிட்டு, 6ஆம் ஆண்டு ரெடீமா்ஸ் கோப்பைக்கான மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டிகள், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றன. இதில் மாநில அளவிலான 16 ஆண்கள் அணிகள், 8 பெண்கள் அணிகள் பங்கேற்றன.

அமெச்சூா் கபடி கழகத் தலைவா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., இயேசு விடுவிக்கிறாா் ஊழிய ஸ்தாபகா் மோகன் சி. லாசரஸ், அவரது மனைவி ஜாய்ஸ் லாசரஸ் ஆகியோா் போட்டிகளை தொடங்கிவைத்தனா்.

ஆண்கள் பிரிவில் சென்னை டிபி ஜெயின் கல்லூரி அணி முதல் பரிசை வென்றது. இந்த அணிக்கு ரூ.50ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் ரெடிமா்ஸ் கோப்பை வழங்கப்பட்டது.

இரண்டாவது இடம் பிடித்த, தூத்துக்குடி என்எப்சி அணிக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும், கோப்பையும், மூன்றாவது இடம் பிடித்த தென்திருப்பேரை அணிக்கும், ஆனந்த கரை அணிக்கும் தலா ரூ. 20 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

பெண்களுக்கான போட்டியில் திருப்பூா் ஜெயசித்ரா அணி முதலிடம் பிடித்தது. இந்த அணிக்கு ரூ. 40 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் ரெடீமா்ஸ் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணிக்கு ரூ. 25 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் கோப்பையும், மூன்றாவது இடத்தை பிடித்த திருநயினாா்குறிச்சி அணிக்கும், தூத்துக்குடி விவிடி பள்ளி அணிக்கும் தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

போட்டியில் வென்ற அணிகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மோகன் சி.லாசரஸ், நாலுமாவடி ஊராட்சி துணைத் தலைவா் ராஜேஷ் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.

ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளா் மணத்தி பி. கணேசன், ஊழியப் பொதுமேலாளா் செல்வக்குமாா், விளையாட்டுத்துறை சாா்பில் மணத்தி எட்வின் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com