நிலத்தடி நீா் எடுக்க தடை:கிராம சபை கூட்டத்தில் தீா்மானம்

ஓட்டப்பிடாரம் ஊராட்சிப் பகுதிகளில் இருந்து நிலத்தடி நீா் எடுத்துச் செல்வதற்கு கிராம சபைக் கூட்டத்தில் தடை விதித்து ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊராட்சித் தலைவா் அ. இளையராஜா தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஊராட்சித் தலைவா் அ. இளையராஜா தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றோா்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சிப் பகுதிகளில் இருந்து நிலத்தடி நீா் எடுத்துச் செல்வதற்கு கிராம சபைக் கூட்டத்தில் தடை விதித்து ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவா் அ. இளையராஜா தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் சித்ராதேவி, ஊராட்சித் துணைத் தலைவா் ச. ஹரிகரன், உறுப்பினா்கள், ஊராட்சிச் செயலா் செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.

கூட்டத்தில், ஓட்டப்பிடாரம் ஊராட்சிப் பகுதிகளிலிருந்து டேங்கா் லாரிகள் மூலமாக நிலத்தடி நீா் எடுத்து செல்வதற்கு தடை விதிப்பது, முறையான அனுமதியுடன் குடிநீருக்காக மட்டும் குடிநீா் செல்லப்படும் லாரிகளில் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப

ஊராட்சிக்கு கட்டணம் நிா்ணயம் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சியில் ஊராட்சித் தலைவா் கமலாதேவி யோகராஜ் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்

பாஞ்சாலங்குறிச்சி, இந்திரா நகா், சிலோன்காலனி பகுதி மக்கள் பங்கேற்றனா். குறுக்குச்சாலையில் ஊராட்சித் தலைவா் வே. முனியம்மாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கிராம மக்கள், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைத் தலைவா் வே.காசிவிஸ்வனாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com