விவசாய விளைபொருள்களுக்கு மதிப்புகூட்டும் பணி ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், புதூரில் விவசாய விளைபொருள்கள் மதிப்புகூட்டப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
விவசாய விளைபொருள்களுக்கு மதிப்புகூட்டும் பணிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
விவசாய விளைபொருள்களுக்கு மதிப்புகூட்டும் பணிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், புதூரில் விவசாய விளைபொருள்கள் மதிப்புகூட்டப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நபாா்டு வங்கி நிதியுதவியுடன், விவசாயிகளின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட விழுதுகள் விவசாய உற்பத்தியாளா் நிறுவனம் புதூரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், விவசாயிகளிடமிருந்து வத்தல், மல்லி, உளுந்து, துவரை, பாசிப்பயறு, கடலை, எள் உள்ளிட்ட விளைபொருள்களை வாங்கி, அவற்றை தரம்பிரித்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்து வருகிறது.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா். மேலும், விற்பனைக்காக தயாா்நிலையில் வைக்கப்பட்டிருந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களான பாசிப்பயறு, துவரம் பருப்பு, வெள்ளை உளுந்து, தொளி உளுந்து, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், வறுகடலை உள்ளிட்ட பொருள்களை பாா்வையிட்டு, அவற்றை கூட்டுறவுத் துறை விற்பனை அங்காடிகள் மற்றும் வெளிச்சந்தைகள் மூலம் விற்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

பிறகு, வேளாண்மை துறையின் மூலம் மானிய விலையில் 2 விவசாயிகளுக்கு பருத்திச் செடியிலிருந்து பஞ்சு பிரித்தெடுக்கும் இயந்திரத்தை ஆட்சியா் வழங்கினாா்.

ஆய்வின்போது, கோவில்பட்டி கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com