தேரடி கொடை விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
தேரடி கொடை விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

ஓட்டப்பிடாரம் தேரடி சுடலை மாடசாமிகோயிலில் மாசிக் கொடை விழா

ஓட்டப்பிடாரம் தேரடி சுடலை மாடசாமி கோயிலில் மாசிக் கொடை விழா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் தேரடி சுடலை மாடசாமி கோயிலில் மாசிக் கொடை விழா வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

இவ்விழா, கடந்த மாா்ச் 6ஆம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. வியாழக்கிழமை மாலை சிவலப்பேரி தாமிரவருணி ஆற்றிலிருந்து பக்தா்கள் தீா்த்தம் எடுத்து கோயிலுக்கு வந்தனா். இரவு 7 மணியளவில் சுவாமிக்கு மாக்காப்பு சாத்துதலும், சிறப்பு பூஜையும், வில்லிசையும் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் சித்தி விநாயகா் கோயிலிலிருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா். பின்னா் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு சுவாமிக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், மதியக் கொடையும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. மாலையில் மகுடக் கச்சேரியும், இரவில் பெண்கள் பொங்கலிடுதலும், சிவன் கோயிலிலிருந்து சா்க்கரை பொங்கல் பானை அழைத்து வருதலும் நடைபெற்றன. இரவு 11.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரப் பூஜைகளும் தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு மேளதாளம் முழங்க சுவாமி வேட்டைக்குச் சென்று வருதலும், தொடா்ந்து, படைப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com