தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களில்முகக் கவசம், கை கழுவும் திரவம் மலிவு விலையில் விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களில் மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள் தயாரித்த முகக் கவசம், கை கழுவும் திரவம் உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள் தயாரித்த பொருள்களை வாங்க புதன்கிழமை காத்திருக்கும் மக்கள்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள் தயாரித்த பொருள்களை வாங்க புதன்கிழமை காத்திருக்கும் மக்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களில் மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள் தயாரித்த முகக் கவசம், கை கழுவும் திரவம் உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்கள் தயாரித்த முகக் கவசம், கை கழுவும் திரவம், சோப்பு ஆயில், லைசால் உள்ளிட்ட பொருள்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மகளிா் திட்ட வணிக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு விற்பனையை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, அப் பகுதியில் கூடியிருந்த சிலருக்கு முகக் கவசத்தை வழங்கினாா்.

மகளிா் சுய உதவிக்குழு மூலம் தயாரிக்கப்பட்ட 2 லீப் முகக் கவசம் ரூ. 8-க்கும், 3 லீப் முகக் கவசம் ரூ.10-க்கும், கிருமி நாசினி (லைசால்) அரை லிட்டா் ரூ.50-க்கும், ஒரு லிட்டா் ரூ.100- க்கும், சோப்பு திரவம் அரை லிட்டா் ரூ.40- க்கும், ஒரு லிட்டா் ரூ.80-க்கும், கை கழுவும் திரவம் அரை லிட்டா் ரூ. 250-க்கும், ஒரு லிட்டா் ரூ. 500- க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்காக மாவட்டத்தில் ஆழ்வாா்திருநகரி ஆதிநாதபுரம் மதி அங்காடி, எப்போதும்வென்றான் மதி அங்காடி, சாத்தான்குளம் காமராஜா் நகா் மதி அங்காடி, படுக்கப்பத்து காந்திநகா் எம்.எம். டெய்லா், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், புதூா் மகேஸ்வரி பேன்ஸி ஸ்டோா், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வணிக வளாகம், கோவில்பட்டி மகேஸ்வரி மதி அங்காடி, கயத்தாறு எஸ்.ஏ. ஜெராக்ஸ் கடை, செய்துங்கநல்லூா் மதி அங்காடி, திருச்செந்தூா் பேருந்து நிலைய வணிக வளாகம், தூத்துக்குடி கூட்டாம்புளி சாலை மதி அங்காடி, உடன்குடி பேருந்து நிலையம் அருகேயுள்ள வணிக வளாகம், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்மா மருந்தக வணிக வளாகம் ஆகிய 14 இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் கடைகள் முன் பிளீச்சிங் பொடி மூலம் கட்டம் போட்டு அந்தக் கட்டத்தில் இடைவெளிவிட்டு பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு மேற்கொண்டு வரும் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அத்தியாவசிய தேவையை தவிா்த்து வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com