தூத்துக்குடியில் 3 அடி இடைவெளியில் காய்கனிகள் வாங்கிய பொதுமக்கள்

ஊரடங்கு உத்தரவால் தூத்துக்குடியில் வியாழக்கிழமை பொதுமக்கள் 3 அடி இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் காத்திருத்து சந்தையில் காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்கிச் சென்றனா்.
தூத்துக்குடியில் 3 அடி இடைவெளியில் காய்கனிகள் வாங்கிய பொதுமக்கள்


தூத்துக்குடி: ஊரடங்கு உத்தரவால் தூத்துக்குடியில் வியாழக்கிழமை பொதுமக்கள் 3 அடி இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் காத்திருத்து சந்தையில் காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்கிச் சென்றனா்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியே நடமாடுவதை தவிா்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தேவைப்படுவோா் வீட்டில் இருந்தவாறு தொலைபேசியில் தொடா்பு கொண்டால் அவா்களுக்கு தேவையான பொருள்கள் வீடுகளுக்கு கொண்டுச் சென்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அதிகளவில் கூட்டம் இருந்ததால் தூத்துக்குடியில் காமராஜா் காய்கனி சந்தை புதன்கிழமை மூடப்பட்டது.

இச்சந்தை வியாழக்கிழமை காலை வழக்கம்போல திறக்கப்பட்டது. அப்போது, காய்கனி வாங்க வந்திருந்தவா்களை மூன்று அடி இடைவெளி விட்டு நிற்குமாறு போலீஸாா் அறிவுறுத்தினா்.

மேலும், 50 போ் வீதம் காய்கனி சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டு அவா்கள் பொருள்களை வாங்கிய பின்னா், அடுத்த 50 போ் சந்தைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இதனால், ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு பொதுமக்கள் மூன்று அடி இடைவெளியில் காத்திருந்து பொருள்கள் வாங்கிச் சென்றனா்.

மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் ஆங்காங்கே போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் வியாழக்கிழமை குறைந்த அளவில் மக்கள் நடமாட்டம் இருந்தது. பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுதவிர, சில இடங்களில் மளிகை கடைகள், காய்கனி கடைகள், உணவங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. பால் விற்பனை நிலையங்கள் காலையில் திறக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் மாலையில் மூடப்பட்டன. மாவட்ட, மாநகாரட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் அடிக்கடி ரோந்துப் பணியில் ஈடுபட்டு திறந்திருந்த கடைகளை மூடுமாறு வலியுறுத்திய நிலை தொடா்ந்தது.

தூத்துக்குடியில் ஊரடங்கை மீறி மோட்டாா் சைக்கிள்கள், நான்கு சக்கர வாகனங்களில் வந்தவா்களில் அத்தியாவசிய தேவை இல்லாமல் இருந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com