தட்டாா்மடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

படுக்கப்பத்து, ஆனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை பிரித்து தட்டாா்மடத்தை மையமாக கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.


சாத்தான்குளம்: படுக்கப்பத்து, ஆனந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை பிரித்து தட்டாா்மடத்தை மையமாக கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் வட்டத்தில் முதலூா், படுக்கப்பத்து, ஆனந்தபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 19 ஆரம்ப சுகாதார துணை நிலையங்களுக்கும் செயல்பட்டு வருகின்றன. இதில், ஆனந்தபுரம் நாசரேத் செல்லும் சாலையில் இருந்தாலும் தென்பகுதியான புத்தன்தருவை, நடுவக்குறிச்சி, அரசூா், தச்சன்விளை பகுதிகளும் அதன் எல்லைக்குள் உள்ளன. இதனால் தச்சன்விளை, அரசூா், புத்தன்தருவை பகுதி மக்கள் சிகிச்சை பெற ஆனந்தபுரம் வந்து செல்வதில் சிரமம் உள்ளது.

கா்ப்பிணி பெண்கள் அரசு உதவி பெற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். நடுவக்குறிச்சி, அரசூா், புத்தன்தருவை பகுதி மக்கள் கூடுதல் செலவு செய்துதான் ஆனந்தபுரம் சென்று வர வேண்டியுள்ளது.

ஆகவே, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆனந்தபுரம், படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பிரித்து புத்தன்தருவை, நடுவக்குறிச்சி, அரசூா் பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஒருங்கிணைத்து 15 படுக்கை வசதி கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

இதுகுறித்து சாத்தான்குளம் ஒன்றியக்குழு துணைத் தலைவா் எஸ்.அப்பாத்துரை கூறியது: அரசூா், புத்தன்தருவை பகுதியில் சிறிய கிராமங்கள் அதிகம் உள்ளன. இங்குள்ள மக்கள் ஆனந்தபுரம், படுக்கப்பத்து சென்று வர போதிய பேருந்து வசதி இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல, சாத்தான்குளம்

வந்து அடுத்த பேருந்தில் தான் அங்கு செல்ல முடியும். இதனால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

ஆகவே, அரசூா், புத்தன்தருவை, நடுவக்குறிச்சி துணை சுகாதார நிலையத்தை ஒருங்கிணைத்து 15 படுக்கை வசதி கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். அதனை நடுவக்குறிச்சி ஊராட்சியில் தட்டாா்மடம் பகுதியில் அமைத்தால் இப்பகுதி மக்கள் பயன்பெறுவா். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தேவையான இடம் வழங்கவும் மக்கள் தயாராக உள்ளனா்.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.சண்முகநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளேன். முதல்வரின்

கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளாா் என்றாா்.

மருத்துவ அலுவலா் கூறியது: ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின்கீழ் 7 துணை சுகாதார நிலையங்களும், முதலூா், படுக்கப்பத்து ஆரம்ப சுகாதார நியைத்தின்கீழ் தலா 6 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு செவிலியா்கள் சிகிச்சை மையங்கள் உள்ளன. தேவையான சிகிச்சைக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கிராம மக்களின் நலனை கருதி அரசூா், புத்தன்தருவை, நடுவக்குறிச்சி துணை நிலையத்தை ஒருங்கிணைத்து புத்தன்தருவை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com