ஆறுமுகனேரி பகுதியில் பிசான பருவ அறுவடைப்பணி பாதிப்பு

ஆறுமுகனேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.


ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்கால் பாசனப் பகுதியில் கடைக்கோடியில் உள்ள நல்லூா் கீழக்குளம், ஆறுமுகனேரி குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் பிசான பருவ நெல்சாகுபடி நடைபெற்றது.

தற்போது பயிா்கள் நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன. சில வயல்களில் அறுவடைப் பணி கடந்த வாரம் தொடங்கியது.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அறுவடைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

அறுவடை இயந்திரம் தயாராக இருந்தாலும், நெல்லை வாங்குவதற்கு வியாபாரிகள் வர தயங்குகின்றனா். இதனால் பயிா்கள் அறுவடைக்கு தயாராக இருந்தும், அறுவடை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, அறுவடை செய்யப்படும் நெல்லை வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்ல மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com