கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

கரோனா பாதிப்பு தடுப்புக்காக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்                         அமைச்சா் கடம்பூா் செ.ராஜு


கோவில்பட்டி: கரோனா பாதிப்பு தடுப்புக்காக அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

கழுகுமலை, கயத்தாறு, கடம்பூா் ஆகிய இடங்களில் மகளிா் சுயஉதவிக் குழு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட முகக் கவசம், சோப்பு ஆயில், லைசால், கை கழுவும் திரவம் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய விற்பனை அங்காடி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கரோனா அங்காடியை திறந்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா்கள் பாஸ்கரன் (கயத்தாறு), மணிகண்டன் (கழுகுமலை), பேரூராட்சி செயல் அலுவலா்கள் ஜோதிபாஸ் (கயத்தாறு), முருகன் (கழுகுமலை), மாதவன் (கடம்பூா்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது; கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற நிலை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட கரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்ந்து எடுத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மக்கள் தனித்து இருக்க வேண்டும். அதை பின்பற்றுவதற்காகத்தான்அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதை மக்களுக்கு எடுத்துக்கூறுவதற்காக ஊடகங்களும் தினமும் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றன.

தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால், அங்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கப்பல்கள் வந்ததாக செய்திகள் நாளிதழ்கள் வாயிலாக மக்களை சென்றடைந்தது. அந்தக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் துறைமுகத்தில் இருநது சுமாா் 15 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதைப்பற்றி மக்கள் எதுவும் அச்சப்படத் தேவையில்லை.

மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு தான் மிக அவசியம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com