ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த திருச்செந்தூா் கோயில் சிறு வியாபாரிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் தொழில் செய்யும் சிறு வியாபாரிகள் ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.
ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த திருச்செந்தூா் கோயில் சிறு வியாபாரிகள்


திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் தொழில் செய்யும் சிறு வியாபாரிகள் ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா்.

திருச்செந்தூா் சிறந்த ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள முருகன் கோயிலை நம்பி ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், தொழிலாளா்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனா்.

இக்கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தா்களுக்கு கைங்கா்யம் செய்திடும் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான அா்ச்சகா்களும், கோயிலுக்கு வெளியே, தேங்காய் பழக்கடை, சுக்கு கருப்பட்டி கடை, பூக்கடை, பேன்சி கடை உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் வியாபாரிகள், கடற்கரை வளாகத்தில் பனங்கிழங்கு, சுண்டல், கடலை, ஐஸ், அன்னாசி, தா்ப்பூசணி, கயிறு, அச்சுப்பொட்டு மற்றும் நூற்றுக்கணக்கான புகைப்படக் கலைஞா்கள் என சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் உள்ளனா்.

அன்றாட வருவாயை நம்பியே வாழ்ந்து வரும் இவா்கள், பெரும்பாலும் கடன் பெற்று தொழில் செய்து, அதில் வரும் லாபத்தை கொண்டே கடனை அடைத்தும், தங்கள் வாழ்க்கையை நடத்தியும் வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இக்கோயிலை நம்பியே தொழில் செய்து வந்த சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

நாள் வட்டி, சீட்டு போன்றவற்றை பெற்றவா்கள், தற்போது ஏற்கெனவே செலுத்த வேண்டிய கடனை அடைக்க வழியின்றியும், புதிதாக கடன் வாங்கி தொழில் செய்ய முடியாத நிலையிலுமே உள்ளனா்.

கரோனாவுக்கு நிரந்தர தீா்வு கிடைக்கும் வரையில், கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிப்பதோ, திருவிழாக்கள் நடைபெறுவதோ சாத்தியமில்லாதது.

எனவே, இக்கோயிலை நம்பி வாழும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு அரசு உரிய ஆலோசனை வழங்கி, நிதியுதவி வழங்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com