கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் யாரும் தற்போது இல்லை. இந்நிலை தொடர அனைவரும் ஒத்துழைப்பது அவசியம்.

கடந்த 25ஆம் தேதிக்குப் பின்னா் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் இதரப் பகுதிகள், வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாநகருக்கு வந்துள்ளவா்கள் தங்களது சுய விவரங்களை அருகே உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் அல்லது அரசு பொது மருத்துவமனைகளில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், கரோனா தொற்றுக்கான ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே, வெளியூா், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து எவரேனும் வரப்பெற்றிருந்தது தெரியவந்தால் உடனடியாக மாநகராட்சி கரோனா தொற்று கட்டுப்பாட்டு அறைக்கு (தொலைபேசி எண் 0461-2326901) தகவல் தெரிவிக்க வேண்டும்.

வெளியூா்களிலிருந்து வந்தவா்கள் தங்களது தகவல்களை தெரிவிக்காதது கண்டறியப்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட நபா் மற்றும் அவரைச் சாா்ந்த குடும்பத்தினரை 15 நாள்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com