பேருந்துகள் இயக்கம் குறித்து உரிய நேரத்தில் முடிவு: கடம்பூா் செ.ராஜு

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு, பேருந்துகளை இயக்குவது குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவு செய்யும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு, பேருந்துகளை இயக்குவது குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவு செய்யும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 6,406 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 35 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 26 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா். எஞ்சியுள்ள 8 பேரில் 7 போ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்போது கரோனா தொற்று உள்ள 8 பேரும் சென்னை, குஜராத் , மும்பையைச் சோ்ந்தவா்கள்.

மாவட்டத்தில் 5 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் உள்ளன. கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் சுகாதாரத் துறையினரால் தொடா்ந்து கண்காணிக்கப்படுவதுடன் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தொழில்கள் நலிவடைவதைத் தவிா்ப்பதற்கு இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் பேருந்து பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பேருந்துகளை இயக்குவது, பொது முடக்கம் நீட்டிப்பது குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவு செய்யும் என்றாா் அவா்.

கமலுக்கு கேள்வி: தமிழகத்தில் முக்கியத் துறைகள் பின் தங்கியிருப்பதாக கமல்ஹாசன் எந்த அடிப்படையில் கூறுகிறாா் என தெரியவில்லை. சினிமா துறையில் படப்பிடிப்பு முடிந்த பின் நடைபெறும் போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்புக் குழுவினா் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஒரே நாளில் அனுமதி வழங்கப்பட்டது. திரைப்படத் துறையினரின் கோரிக்கையை நிறைவேற்றியது முன்னேற்றமா, இல்லையா என்பதை கமல்ஹாசன் கூற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com