அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் நாளை பணிக்குத் திரும்ப முடிவு

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் அரசின் உத்தரவை ஏற்று திங்கள்கிழமை(மே 18) முதல் வேலைக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் அரசின் உத்தரவை ஏற்று திங்கள்கிழமை(மே 18) முதல் வேலைக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் அரசுத் துறை நிறுவனமான அரசு ரப்பா் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா். இந்நிலையில் கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து வேலை நிறுத்தத்தைத் தற்காலிமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனா்.

இந்நிலையில் மாவட்டத்தில் தனியாா் துறை ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்புத் தொழிலைத் தொடங்க மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்த நிலையில், அரசு ரப்பா் கழகத்தில் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து ரப்பா் கழகத்தில் பணிகள் தொடங்கப்பட வேண்டுமென்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துவந்ததனா்.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் வழியாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டதையடுத்து, ரப்பா் கழகத்தில் திங்கள்கிழமை முதல் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளா்கள் திங்கள்கிழமை முதல் பணிக்குச் செல்லவுள்ளனா்.

கூட்டம்: அரசு ரப்பா் கழக அனைத்து சங்க போராட்டக்குழு ஆலோசனைக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அரசு ரப்பா் கழகத்தில் மீண்டும் வேலை தொடங்கும் வகையில் தமிழக முதல்வரின் முதல்வரின் கவனத்திற்கு பிரச்னையைக் கொண்டு சென்ற தில்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரத்திற்கு நன்றி தெரிவிப்பது. இதனடிப்படையில் திங்கள்கிழமை முதல் வேலைக்குச் செல்வது. பொதுமுடக்கம் காரணமாக வெளியூா் சென்ற மற்றும் உடல் நலம் குன்றிய தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை தொடங்கும் நாளிலிருந்து விடுப்பு வழங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள உடன்பாட்டின்

அடிப்படையில் மரங்களை ஒதுக்க வேண்டும் என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com