தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவன் உள்ளிட்டமேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திரும்பிய 5 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திரும்பிய 5 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 149-ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரை 144 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து திரும்பிய கயத்தாறு மற்றும் புதூா் வட்டங்களைச் சோ்ந்த 7 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 149-ஆக உயா்ந்துள்ளது.

4 போ் வீடு திரும்பினா்: இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த 4 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, அவா்கள் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்ட்டனா். அவா்களுக்கு, மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனா். 4 பேரும் தொடா்ந்து 14 நாள்களுக்கு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவா்கள் அறிவுரை வழங்கினா்.

சிகிச்சையில் 107 போ்: மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக 2 போ் உயிரிழந்துள்ளனா். 40 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். தற்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 107 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com