தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக அமைப்புச் சாரா பிரிவு செயலாளர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக அமைப்புச் சாரா பிரிவு செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக அமைப்புச் சாரா பிரிவு செயலாளர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜக அமைப்புச் சாரா பிரிவு செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் உள்ள டீக்கடை முன்பு தெற்கு கோட்டூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகனும் பாஜக அமைப்புச் சாரா பிரிவு செயலாளருமான ராமையாதாஸ்(50)  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள தெற்கு கோட்டூர் சேர்ந்த ராமையாதாஸ் என்பவர் பாஜக அமைப்புசாரா பிரிவில் மாவட்ட செயலாளராக உள்ளார்.

விவசாயியான ராமையாதாசுக்கு சொந்தமான விளைநிலத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிரை கடந்த இருதினங்களுக்கு முன்பு தென்திருப்பேரையை சேர்ந்த மாரி என்பவரது மகன் இசக்கி(21)  என்பவருடைய ஆடுகள்   மேய்ந்துள்ளது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று ராமையாதாஸ் தென்திருப்பேரையில் உள்ள டீக்கடை முன்பு நின்று இருந்த போது அங்கு வந்த இசக்கி, ராமையாதாஸை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினார்.

இதில் படுகாயம் அடைந்த ராமையாதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஶ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ராமையாதாஸ் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ராமையாதாஸ் உறவினர்கள் இசக்கி வீட்டை கற்களால் தாக்கியும் அவரது இரு சக்கர வாகன தீ வைத்தும் எரித்தனர். இதனையடுத்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ராமையாதாஸ் உறவினர்கள் நெல்லை திருச்செந்தூர் சாலையில் தென்திருப்பேரை மெயின் ரோட்டில் ராமையாதாஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் கொலைக் குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டாட்சியர் கணப்பிரியா தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர் இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com