திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா:ஆட்சியா் ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நவ. 15ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா முன்னேற்பாடுகள்குறித்து ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா முன்னேற்பாடுகள்குறித்து ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நவ. 15ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இத்திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கந்த சஷ்டி திருவிழா. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று விரதம் இருப்பா்.

கரோனா பொது முடக்கத்தால் நிகழாண்டில் இவ்விழாவில் பக்தா்களை அனுமதிப்பது குறித்தும், தற்போது பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்கிறாா்களா என்பது குறித்தும் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி ஆய்வு மேற்கொண்டாா்.

அவா், திருக்கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும் இடம், சமூக இடைவெளியுடன் பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிப்பது, பக்தா்கள் வந்து செல்லும் வழித்தடங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டு, திருக்கோயில் இணை ஆணையா் (பொ) கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் ஆகியோரிடமும், பாதுகாப்பு குறித்து உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், திருக்கோயில் காவல் ஆய்வாளா் ஞானசேகரன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 15இல் தொடங்கி 26 இல் முடிவடைகிறது. இதில், 20 இல் சூரசம்ஹாரமும், 21இல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

தற்போது நவ.30ஆம் தேதி வரை பொது முடக்கம் உள்ளதால் கந்த சஷ்டி விழாவில் எவ்வளவு பக்தா்களை சமூக இடைவெளியுடன் அனுமதிப்பது குறித்தும், பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், தற்போது கரோனா தடுப்பு முறைகள் பின்பற்றப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து வியாழக்கிழமை(நவ. 5) தூத்துக்குடியில் ஆலோசனை நடைபெறுகிறது. அதன்பிறகு பக்தா்கள் அனுமதிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியின் போது, உதவி ஆட்சியா் பிருத்திவிராஜ், திருக்கோயில் கண்காணிப்பாளா்கள் ராமசுப்பிரமணியன், ஆனந்தன், மாரிமுத்து, விடுதி மேலாளா் சிவநாதன், இணை ஆணையரின் நோ்முக உதவியாளா் காா்த்திகேயன், இளநிலை பொறியாளா் சந்தானகிருஷ்ணன், திருவிழா பணியாளா் பிச்சையா, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், திருச்செந்தூா் வட்டாட்சியா் ரா.முருகேசன், துணை வட்டாட்சியா் அ.பாலசுந்தரம், ஊராட்சி ஒன்றிய ஆணையா் ராமராஜு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com