தூத்துக்குடி: பாலத்தில் சென்ற லாரி மருத்துவமனை வளாகத்தில் கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியில் பாலத்தில் சென்ற லாரி திடீரென நிலைதடுமாறி கீழே உள்ள மருத்துவமனை வளாகத்தில் கவிழ்ந்தது.
விபத்துக்குள்ளான லாரி.
விபத்துக்குள்ளான லாரி.

தூத்துக்குடியில் பாலத்தில் சென்ற லாரி திடீரென நிலைதடுமாறி கீழே உள்ள மருத்துவமனை வளாகத்தில் கவிழ்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான லாரி தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு வந்துள்ளது.

இந்த லாரியை ரமேஷ் குமார் என்ற ஓட்டுனர் ஓட்டிய வந்துள்ளார். அவருடன் லட்சுமணன் என்பவர் கிளீனராக லாரியில் வந்துள்ளார். இன்று அதிகாலை புதிய பேருந்து நிலையம் அருகே பாலத்தில் ஏறி மார்க்கெட்டிற்கு செல்வதற்காக பாலத்தை வலது பக்கம் திரும்பிய போது நிலைதடுமாறி லாரி தலைகுப்புற கீழே கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்து விழுந்த இடத்தில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. லாரி தனியார் மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளே விழுந்த போதும் மக்கள் யாரும் நடமாட்டம் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

மருத்துவமனை காவலாளி அறையை விட்டு வெளியே அமர்ந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  இந்த விபத்தில் லாரி கிளீனர் காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com