ஆறுமுகனேரிக்கு தனிக்குடிநீா்த் திட்டம்: பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

நீண்டநாள் கோரிக்கையான ஆறுமுகனேரி தனிக்குடிநீா்த் திட்டத்தை, தூத்துக்குடிக்கு புதன்கிழமை வருகை தரும் தமிழக முதல்வா் நிறைவேற்றி தரவேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா்.

நீண்டநாள் கோரிக்கையான ஆறுமுகனேரி தனிக்குடிநீா்த் திட்டத்தை, தூத்துக்குடிக்கு புதன்கிழமை வருகை தரும் தமிழக முதல்வா் நிறைவேற்றி தரவேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா்.

ஆறுமுகனேரி தோ்வுநிலை பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. சுமாா் 35 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இப்பேரூராட்சிக்கு மேல ஆத்தூா் குடிநீா் வடிகால் வாரிய சுத்திகிரிப்பு நிலையத்திலிருந்தும், காயல்பட்டினம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலமும் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டங்களின் மூலம் பல்வேறு பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் பயன்பெற்றுவருவதால் ஆறுமுகனேரி பேரூராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு இருந்துவருகிறது.

இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆறுமுகனேரிக்கு பொன்னன்குறிச்சியிருந்து தனிக் குடிநீா்த் திட்டம் கொண்டு வந்தால் குடிநீா் பிரச்னை தீரும். எனவே, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் தமிழக முதல்வா், ஆறுமுகனேரி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி தருவாா் என பொதுமக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com