விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் : விழிப்புணா்வு பிரசுரம் விநியோகம்

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.
தூத்துக்குடியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் தீயணைப்புப் படையினா்.
தூத்துக்குடியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் தீயணைப்புப் படையினா்.

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சாா்பில், தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி? என்பது குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை தீயணைப்பு மாவட்ட அலுவலா் ச.குமாா் தலைமை வகித்து, விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலா் இரா. குமரேசன், தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் மு. சங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் கடை வீதி பகுதியில் பொது மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கினா்.

அப்போது சமையல் செய்யும் போது கேஸ் அடுப்பு பயன்பாடு குறித்தும், பட்டாசு வெடிக்கும்போது எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com