வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்த வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும்

இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

9 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று 10 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ. 200-ம், 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா் களுக்கு மாதம் ரூ. 300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ .400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600- வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படும்.

இந்த உதவித் தொகை நேரடியாக விண்ணப்பதாரரின் ஆதாா் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.

தொடா்ந்து பதிவை புதுப்பித்து இருத்தல் வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், மற்ற வா்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தொலைவழிக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்வோா் உதவித் தொகை பெறலாம். ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோா் தொடா்ந்து 3 ஆண்டு வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு அஞ்சல் வாயிலாக பிப். 28 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com