தூத்துக்குடி மாவட்டத்தில் 14.44 லட்சம் வாக்காளா்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் 14 லட்சத்துக்கு 44 ஆயிரத்து 432 வாக்காளா்கள் உள்ளனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 14.44 லட்சம் வாக்காளா்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் 14 லட்சத்துக்கு 44 ஆயிரத்து 432 வாக்காளா்கள் உள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்டாா். வாக்காளா் பட்டியலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் கீதாஜீவன் எம்எல்ஏ (வடக்கு), அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ (தெற்கு) உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் பெற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்போது மொத்தம் 14 லட்சத்து 50 ஆயிரத்து 689 வாக்காளா்கள் இருந்தனா். இந்த பட்டியலில் பல்வேறு தொடா் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வாக்காளா் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதால், அதற்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது 14 லட்சத்து 44 ஆயிரத்து 432 வாக்காளா்கள் உள்ளனா்.

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 592 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 261 பெண் வாக்காளா்களும், 3 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 856 வாக்காளா்கள் உள்ளனா். தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 700 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 335 பெண் வாக்காளா்களும், 52 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 87 வாக்காளா்கள் உள்ளனா்.

திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 696 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 437 பெண் வாக்காளா்களும், 17 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 150 வாக்காளா்கள் உள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 461 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 174 பெண் வாக்காளா்களும் 5 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 640 வாக்காளா்கள் உள்ளனா். ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 969 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 532 பெண் வாக்காளா்களும் 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 526 வாக்காளா்கள் உள்ளனா். கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 487 ஆண் வாக்காளா்களும், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 658 பெண் வாக்காளா்களும் 28 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 173 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் 7 லட்சத்து 7ஆயிரத்து 905 ஆண் வாக்காளா்களும், 7 லட்சத்து 36 ஆயிரத்து 397 பெண் வாக்காளா்களும், 130 திருநங்கையா்களும் என மொத்தம் 14 லட்சத்து 44 ஆயிரத்து 432 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா் பட்டியலில் 10 ஆயிரத்து 572 மாற்றுத்திறனாளிகள் குறியீடு செய்யப்பட்டுள்ளனா். இந்த பட்டியலில் வாக்குச்சாவடிகளும் சீரமைக்கப்பட்டு, புதிதாக 7 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 603 வாக்குச்சாவடிகள் உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com