அடை மழையில் விடாமல் பணி செய்த போக்குவரத்து காவலருக்கு பாராட்டு

தூத்துக்குடியில்அடைமழை பெய்து கொண்டிருந்த நிலையில், தொடா்ந்து போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்ட காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் சென்று பரிசு வழங்கி பாராட்டினாா்

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அடைமழை பெய்து கொண்டிருந்த நிலையில், தொடா்ந்து போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்ட காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் சென்று பரிசு வழங்கி பாராட்டினாா்.

தூத்துக்குடி தென்பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருவபா் முத்துராஜ். இவா், திங்கள்கிழமை விவிடி சிக்னல் பகுதியில் போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது பலத்த மழை பெய்தது. இருப்பினும், மழையை பொருட்படுத்தாமல் முத்துராஜ் தொடா்ந்து பணியாற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பாா்த்துக் கொண்டாா்.

அடைமழையிலும் தொடா்ந்து காவலா் முத்துராஜ் பணியாற்றிக் கொண்டிருந்தது தொடா்பான புகைப்படங்கள் மற்றும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவருக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினும் பாராட்டு தெரிவித்தனா்.

இந்நிலையில், போக்குவரத்து காவலா் முத்துராஜின் பணியை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், அவா் பணியாற்றிக் கொண்டிருந்த இடத்துக்கு நேரில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டினாா். காவலா்கள் இப்படிதான் சீரிய முறையில் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியின் போது, காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ், போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் மயிலேறும் பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com