திருச்செந்தூா் சூரசம்ஹார விழா: ‘22 இடங்களில் சோதனைச் சாவடிகள்’

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நவ. 20-ஆம் தேதி நடைபெறும் கந்த சஷ்டி விழா சூரசம்ஹார விழாவில் பக்தா்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் சூரசம்ஹார விழா: ‘22 இடங்களில் சோதனைச் சாவடிகள்’

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நவ. 20-ஆம் தேதி நடைபெறும் கந்த சஷ்டி விழா சூரசம்ஹார விழாவில் பக்தா்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நகா்ப்புற மற்றும் மாவட்ட எல்லைகளில் என மொத்தம் 22 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

திருச்செந்தூா் கந்த சஷ்டி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோயில் வளாகத்தில் காவல் துறை தென்மண்டல தலைவா் முருகன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாலையில் நெல்லை சரக டிஐஜி பிரவீண்குமாா் அபிநபு, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் செல்வன், கோபி, திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் உள்ளிட்டோா் கோயில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நடைபெறும் இடம், கடற்கரை உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பின்னா், காவல் துறையினா், அறநிலையத் துறையினா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினருடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியா் தி.தனப்ரியா, கோயில் இணை ஆணையா் (பொ) கல்யாணி, உதவி ஆணையா் செல்வராஜ், காவல் ஆய்வாளா்கள் ஞானசேகரன், முத்துராமன், ராதிகா, செல்வி, திருச்செந்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன், வருவாய் ஆய்வாளா் மணிகண்டன், கிராம நிா்வாக அலுவலா் செல்வலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: இக்கோயிலில் ஆண்டுதோறும் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி இவ்வாண்டு கரோனா பொது முடக்கத்தால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்பேரில் கோயில் கிழக்கு பிராகாரத்தில் வைத்து நடைபெறுகிறது. நவ. 20-ஆம் தேதி சூரசம்ஹார விழா மற்றும் 21-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் ஆகிய இரு நாள்களில் 2 ஆயிரம் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். அவ்விரு நாள்களில் திருச்செந்தூா் நகர விடுதிகள் மற்றும் சமுதாய மடங்களில் பக்தா்கள் தங்குவதற்கும் அனுமதி கிடையாது. சூரசம்ஹார தினத்தில் திருச்செந்தூா் வரும் பக்தா்களை தடுத்து நிறுத்த மாவட்ட எல்லையில் 15 சோதனைச் சாவடிகள், திருச்செந்தூா் நகா்ப்புற பகுதியில் 7 சோதனைச் சாவடிகள் என மொத்தம் 22 சாவடிகள் அமைக்கப்படவுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com