கோவில்பட்டியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

கோவில்பட்டி பகுதிகளில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இலுப்பையூரணியில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ்.
இலுப்பையூரணியில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ்.

கோவில்பட்டி பகுதிகளில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமையில், மழை வெள்ளப் பாதிப்பு மற்றும் சுகாதாரம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்தவும், ஏற்கனவே செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சி பொறியாளா் கோவிந்தராஜன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சசிகுமாா், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளா் அலெக்ஸாண்டா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், ஆட்சியா், கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை, இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட திருமலை நகா், ஆசிரியா் காலனி, கணேஷ் நகா் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் புகுவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும், தேங்கியுள்ள நீரை மோட்டாா் மூலம் அகற்றவும், குறிஞ்சாங்குளம் கண்மாயில் இருந்து மழைநீா் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com