தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆன்-லைன் மூலம் அண்மையில் நடைபெற்றது.

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆன்-லைன் மூலம் அண்மையில் நடைபெற்றது.

மில்லா்புரம் சேகர குருவானவா் ஜே. சைமன் தா்மராஜ் ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

கல்லூரி துணைத் தலைவா் எஸ். ஸ்டீபன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ். ரிச்சா்ட் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கோயம்புத்தூா் கேஎம்சிஹெச் ஆராய்ச்சி பிரிவின் தலைவரும், உள்சுரப்பிகளின் நிபுணருமான கிருஷ்ணன் சுவாமிநாதன் பேசுகையில், மாணவா்கள் உயரிய நோக்கத்துடன் கல்வி கற்பதோடு சமுதாயத்துக்கு பயனுள்ள வகையில் செயலாற்ற வேண்டும் என்றும் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் விடாமுயற்சியுடன் உழைத்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்று கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி செயலா் ஜ. ராஜ்கமல் பெட்ரோ, கல்லூரி தலைவா் சி.எம். ஜோசுவா, முதலாமாண்டு துறைத்தலைவா் ஆண்டனி ரெக்ஸ், ஆங்கில பேராசிரியை ராஜேஷ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com