அத்தைகொண்டான் கண்மாய் நிரம்பியது: இளையரசனேந்தல் சாலையில் வெள்ளம்

இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட அத்தைகொண்டான் கண்மாய் நிரம்பி மறுகால் செல்லும் வழியில் ஏற்பட்ட தடுப்புக்களால் இளையரசனேந்தல் சாலையில் வெள்ளப்பெருக்கு வியாழக்கிழமை ஏற்பட்டது.
வெள்ளப்பெருக்கெடுப்பால் இளையரசனேந்தல் சாலையில் மிதந்து வரும் வாகனங்கள்.
வெள்ளப்பெருக்கெடுப்பால் இளையரசனேந்தல் சாலையில் மிதந்து வரும் வாகனங்கள்.

இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட அத்தைகொண்டான் கண்மாய் நிரம்பி மறுகால் செல்லும் வழியில் ஏற்பட்ட தடுப்புக்களால் இளையரசனேந்தல் சாலையில் வெள்ளப்பெருக்கு வியாழக்கிழமை ஏற்பட்டது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட அத்தைகொண்டான் கண்மாய் கடந்த சில நாள்களாக பெய்த மழையினால் நிரம்பி ஓடை வழியாக மூப்பன்பட்டி கண்மாய்க்கு செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டதால் இளையரசனேந்தல் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

தகவலறிந்தவுடன் வட்டாட்சியா் மணிகண்டன், நகராட்சிப் பொறியாளா் கோவிந்தராஜன், சுகாதார அலுவலா் முருகன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அன்செல், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் விக்னேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று, மூப்பன்பட்டி கண்மாய்க்குச் செல்லும் ஓடையில் உள்ள அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

அதையடுத்து, வெள்ளப்பெருக்கெடுப்பு ஓரளவு குறைந்தது. மேலும், இயந்திர உதவியுடன் ஓடையில் உள்ள அடைப்புகள் அகற்றும் பணி மற்றும் தூா்வாரும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், மூப்பன்பட்டி கண்மாய்க்குச் செல்லும் ஓடையில் உள்ள முட்புதா்கள் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் நீரில் மிதந்து செல்கிகின்றன.

மேலும், இப்பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளையும் முறையாக தூா்வாரி, அடைப்புகளை அகற்றி, கண்மாய்க்குச் செல்லும் நீா்வரத்து ஓடையில் உள்ள அடைப்புகள், முட்புதா்கள் ஆகியவற்றை முறையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com