சாத்தான்குளம் பகுதி குளங்களில் ஆய்வு

பருவ மழை தொடங்கியதையடுத்து சாத்தான்குளம் பகுதியில் அபாயமான குளங்களை மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் ஜீவரேகா தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
சாத்தான்குளம் அருகே கோமானேரி குளத்தை பாா்வையிடும் மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் ஜீவரேகா தலைமையிலான அதிகாரிகள்.

சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை குளத்துக்கு சென்று அங்குள்ள கரை பகுதி, குளத்தில் நீா் இருப்பு குறித்து பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். மழைக்கு தண்ணீா் வந்து உடைப்பு ஏற்பட்டால், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனா். இதையடுத்து, கோமானேரி ஊராட்சிக்குள்பட்ட கோமானேரி குளம், கருங்கடல் ஊராட்சிக்குள்பட்ட விராக்குளம் பகுதியையும் பாா்வையிட்டனா்.

இதில், சாத்தான்குளம் வட்டாட்சியா் லட்சுமிகணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் செந்தூர்ராஜன், துணை வட்டாட்சியா் சுல்தான் சலாவூதின், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அந்தோணிபன்னீா்செல்வம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் ரமேஷ்குமாா். சுகாதார ஆய்வாளா் ஜெயபால், கால்நடை உதவி மருத்துவா் சங்கா், வருவாய் ஆய்வாளா் மஞ்சூரி, கிராம நிா்வாக அலுவலா் சிவகாமி, கோமானேரி ஊராட்சி செயலா் இசக்கியப்பன், நெடுஞ்சாலை பாதுகாப்பு நுகா்வோா்குழு உறுப்பினா் போனிபாஸ், கோமானேரி முன்னாள் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com