தொடா் மழை: கோவில்பட்டி, கயத்தாறில் 6 கண்மாய்கள் நிரம்பின

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால்

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் ஆறு கண்மாய்கள் நிரம்பியதையடுத்து, கண்மாயின் கரை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி குறுவட்டத்துக்கு உள்பட்ட குதிரைகுளம், வடக்கு வண்டானம், தெற்கு வண்டானம் ஆகிய கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்குப் பாத்தியப்பட்ட கண்மாய்கள் நிரம்பியதையடுத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்றும் தொழிலாளா்கள் கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

அதுபோல, கடம்பூா் குறுவட்டத்துக்கு உள்பட்ட குருமலையில் உள்ள கண்மாய் நிரம்பியதையடுத்து, கரை பலப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மறுகால் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

காமநாயக்கன்பட்டி குறுவட்டத்துக்கு உள்பட்ட தீத்தாம்பட்டி கீழத்தெருவில் கோ.சக்திவேல் என்பவரது வீட்டின் ஒருபக்கச்சுவா் மழைக்கு சேதமடைந்தது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிழவிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இரு கண்மாய்களும் நிரம்பி மறுகால் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com